Thursday, June 4, 2009

நாற்பது ரூபாய்க்கு நூறு நட்சத்திரங்கள்

நாற்பது ரூபாய்க்கு நூறு நட்சத்திரங்கள் என கூவி விற்ற சிறுவனிடம் பேரம் பேசி முப்பது ரூபாய்க்கு நூறு என
வாங்கினேன் நானும் என்மனைவி பிள்ளைகள் எல்லோருமாய்
படுக்கை அறையிம்கூரையில் ஓட்டினோம் அந்த செயற்கை நட்சத்திரங்களை

இரவு ஆனது விளக்கனைத்தோம் மின்னியது ................
நட்சத்திரங்களை கூட காசு கொடுத்து வாங்கிவிட்டோம்
இனி நாளைக்கு சூரியனையும் சந்திரனையும் வாங்கிட வேண்டும் என்ற பேராவலில் உறங்கிபோனேன் ...........................

நட்சக்த்திரம் நாற்பது ரூபாய் சரி
சூரியன் சந்திரன் விண்வெளி எல்லாம் என்ன விலையாக இருக்கும் ????????????

என்ன விலையாக இருப்பினும் அதை எப்படியகவேனும் வாங்கி வீட்டின் கூரையில் ஒட்டி அழகு பார்க்க வேண்டும்

சூரியன் சந்திரன் விண்வெளி நட்சத்திர கூட்டங்கள் இவை யாவையும் பார்க்க நேரமில்லாத நகரத்தான் ஒருவனின் ராடியம் பூசப்பட்ட இந்த செயற்கை வானவீதியை வாழ்க்கை நகரத்தில் நகர்த்துதல் .....அவசியமாகவும் அவஸ்தையாகவும் உள்ளது ..............................

No comments:

Post a Comment