Thursday, June 4, 2009

யார் நீங்கள் ??

யார் நீங்கள் ????????????????
நட்சத்திரங்களை விற்பவரா ?
நட்சத்திரங்களை வந்குபவர நீங்கள் ??

இரண்டுமே நாம்தான் சிலவற்றை விற்கிறோம் சிலவற்றை வாங்குகிறோம் நட்சத்திர கதைகள் இன்னும் வரும் ...................

நாற்பது ரூபாய்க்கு நூறு நட்சத்திரங்கள்

நாற்பது ரூபாய்க்கு நூறு நட்சத்திரங்கள் என கூவி விற்ற சிறுவனிடம் பேரம் பேசி முப்பது ரூபாய்க்கு நூறு என
வாங்கினேன் நானும் என்மனைவி பிள்ளைகள் எல்லோருமாய்
படுக்கை அறையிம்கூரையில் ஓட்டினோம் அந்த செயற்கை நட்சத்திரங்களை

இரவு ஆனது விளக்கனைத்தோம் மின்னியது ................
நட்சத்திரங்களை கூட காசு கொடுத்து வாங்கிவிட்டோம்
இனி நாளைக்கு சூரியனையும் சந்திரனையும் வாங்கிட வேண்டும் என்ற பேராவலில் உறங்கிபோனேன் ...........................

நட்சக்த்திரம் நாற்பது ரூபாய் சரி
சூரியன் சந்திரன் விண்வெளி எல்லாம் என்ன விலையாக இருக்கும் ????????????

என்ன விலையாக இருப்பினும் அதை எப்படியகவேனும் வாங்கி வீட்டின் கூரையில் ஒட்டி அழகு பார்க்க வேண்டும்

சூரியன் சந்திரன் விண்வெளி நட்சத்திர கூட்டங்கள் இவை யாவையும் பார்க்க நேரமில்லாத நகரத்தான் ஒருவனின் ராடியம் பூசப்பட்ட இந்த செயற்கை வானவீதியை வாழ்க்கை நகரத்தில் நகர்த்துதல் .....அவசியமாகவும் அவஸ்தையாகவும் உள்ளது ..............................

வியாபாரம் செய்யும் நண்பர்களுக்காக......

வணக்கம் அன்பார்ந்த நண்பர்களே
இது வியாபாரம் செய்யும் நண்பர்களுக்காக நான் உருவாக்கியிருக்கும் புதிய வலைப்பூ

இதில் அன்றாடம் சிறுதொழில் செய்யும் சிறு வியாபாரிகள் முதல்
கோடிகளில் கோடி கட்டி பறக்கும் பெரும் முதலாளிகள் வரையிலான கதைகளை உங்களிடம் பகிந்து கொள்வதே எனது நோக்கம் ..........................
நன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த வலைப்பூவின் முக்கிய நோக்கம் ...........
கதைகள் தொடரும் ............நித்தம் ஒரு பூ பூக்கும் நிச்சயமாய் ................